செய்திகள்
புதுவை பல்கலைக்கழகத்தில் கொரோனா பராமரிப்பு மையம்- துணைவேந்தர் ஒப்புதல்
புதுவை பல்கலைக்கழகம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் நலனுக்காக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தணிக்க இது ஒரு சிறப்பு ஏற்பாடாக செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத் சிங், பல்கலைக்கழகத்தில் கொரோனா பராமரிப்பு மையத்தை அமைப்பதற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளார். கவர்னரின் ஒப்புதல் பெற்ற பிறகு இம்மையம் நிறுவப்படும்.
பல்கலைக்கழகத்தின் ஆசிரிய, ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான போதெல்லாம் சிகிச்சைக்கு முன்னுரிமை அடிப்படையில் போதுமான அளவு படுக்கைகள் மற்றும் சிறப்பு வார்டுகளை ஒதுக்கவும் பல்கலைக்கழகம் அறிவுறுத்தும்.
அத்துடன் புதுவை பல்கலைக்கழகம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் நலனுக்காக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தணிக்க இது ஒரு சிறப்பு ஏற்பாடாக செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.