செய்திகள்
வழக்கு பதிவு

ஈரோட்டில் ஊரடங்கை மீறி சுற்றியதாக 1,000 வழக்குகள் பதிவு- போலீசார் அதிரடி நடவடிக்கை

Published On 2021-05-17 16:36 IST   |   Update On 2021-05-17 16:36:00 IST
சென்னிமலை பகுதியில் தேவையில்லாமல் வெளியே சுற்றிய 12 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முழு ஊரடங்கின்போது டவுன் டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, பஸ் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு பெருந்துறை ரோடு உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்தனர். அப்போது தேவையில்லாமல் இருசக்கர வாகனங்கள், கார்களில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

நேற்று ஒரேநாளில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்ததாக 802 வழக்குகளும், முககவசம் உட்பட அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் வந்ததாக 226 வழக்குகளும் என மொத்தம் 1000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் 87 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னிமலை பகுதியில் தேவையில்லாமல் வெளியே சுற்றிய 12 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டு 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா வேனில் முககவசம், சமூக இடைவெளி இல்லாததால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News