செய்திகள்
கொலை

ராஜபாளையத்தில் கட்டிட தொழிலாளி கொலை- உறவினர் கைது

Published On 2021-05-13 12:27 IST   |   Update On 2021-05-13 12:27:00 IST
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தலையில் கல்லைபோட்டு கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக உறவினரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஆவரம்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 45),  கட்டிட தொழலாளி.

இவருக்கும் இவரது அக்காள் மகன் கார்த்திக் (29) என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது குறித்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை. இதனால் 2 பேருக்கும் அடிக்கடி தகராறு  ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு மேல் பெருமாள் கோவில் தெருவில் கணேசன் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் சொத்து பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

ஆத்திரமடைந்த கார்த்திக், கணேசனை கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கணேசன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணேசனை கொலை செய்த கார்த்திக்கை கைது செய்தனர்.

Similar News