செய்திகள்
கோப்பு படம்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு வார்டு அமைக்கும் பணி

Published On 2021-05-10 14:45 IST   |   Update On 2021-05-10 14:45:00 IST
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு வருகிறார்கள். அதனால் படுக்கை இல்லாத சூழல் காணப்பட்டது. கொரோனா சிகிச்சைக்காக ஆம்புலன்சில் வந்த நோயாளிகள் காத்திருக்கும் அவலம் நேர்ந்தது.

வேலூர்:

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கெரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இங்கு 550 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது.

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு வருகிறார்கள். அதனால் படுக்கை இல்லாத சூழல் காணப்பட்டது. கொரோனா சிகிச்சைக்காக ஆம்புலன்சில் வந்த நோயாளிகள் காத்திருக்கும் அவலம் நேர்ந்தது.

படுக்கைகள் இல்லாததால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாத நிலை காணப்பட்டது. மூச்சு திணறல் மற்றும் மோசமான நிலையில் வரும் கொரோனா நோயாளிகளுக்கு உறவினர் காத்திருக்கும் அறை மற்றும் வராண்டாக்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதல் சிறப்பு வார்டு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவமனை தீவிரசிகிச்சை பிரிவு அருகே காலி இடத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க ஷெட் அடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

இங்கு ஆக்சிஜன் வசதியுன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News