செய்திகள்
கோப்பு படம்.

சினிமா உதவி இயக்குனர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி

Published On 2021-05-08 14:48 GMT   |   Update On 2021-05-08 14:48 GMT
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சினிமா உதவி இயக்குனர் உள்பட 4 பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானார்கள்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதேபோல பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றனர். இறப்பு விகிதமும் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இறந்த 4 பேரில் ஒருவர் பா.ஜ.க.வை சேர்ந்த சென்னை மதுரவாயல் மண்டல செயலாளராக இருந்த தாயுமானவர். இவர் கொரோனாவுக்கு இறந்ததாக வேலூர் பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் அவர், சினிமா உதவி இயக்குனராகவும் இருந்துள்ளார்.

இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பஜார் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 66), வியாபாரி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாளுக்கு, நாள் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News