செய்திகள்
விபத்து

கல்பாக்கம் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி

Published On 2021-04-29 21:35 IST   |   Update On 2021-04-29 21:35:00 IST
கல்பாக்கம் அருகே அரசு பஸ்சும் தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார்.
கல்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த 40 பேர் ஒரு தனியார் பஸ் மூலம் கல்பாக்கத்தில் நடக்க இருந்த நிச்சயதார்த்த விழாவுக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்ற பஸ் கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி கிராம வளைவில் வந்தபோது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் தனியார் பஸ்சின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏழுமலை (74) சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News