செய்திகள்
வீராணம் ஏரி

3 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரி வறண்டது

Published On 2021-04-29 02:39 GMT   |   Update On 2021-04-29 02:41 GMT
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர் மட்டத்திற்கு ஏற்ப தண்ணீர் அனுப்பப்படுகிறது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர் மட்டத்திற்கு ஏற்ப தண்ணீர் அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பாண்டு வீராணம் ஏரி 2 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதற்கிடையே தற்போது உலக வங்கி நிதி உதவியுடன் வீராணம் ஏரியில் ரூ.73 கோடியே 64 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றினர். மேலும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், கடும் வெயில் காரணமாகவும் நீர்மட்டம் குறைந்து வந்தது.

இதனால் தற்போது வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரி தண்ணீர் இன்றி வறண்டுபோய் உள்ளது. இருப்பினும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடாக பரவனாறு பகுதியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது.
Tags:    

Similar News