செய்திகள்
கோப்புபடம்

மண்ணிவாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Published On 2021-04-28 22:07 IST   |   Update On 2021-04-28 22:07:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் மண்ணிவாக்கம் ஊராட்சியிலும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வண்டலூர்: 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் மண்ணிவாக்கம் ஊராட்சியிலும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக மண்ணிவாக்கம் ஊராட்சியில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு முதல் தவணை கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டனர்.

இதில் மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News