செய்திகள்
2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அருகே உள்ள அஸ்தினாபுரம், பச்சையம்மன் நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 49). இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் 2-வது மாடியில் இருந்து ஏணி போட்டு ஏறி தென்னை மரத்தில் இருந்த ஓலையை வெட்ட முயன்றார். அப்போது திடீரென நிலைதடுமாறி 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.