செய்திகள்
கோப்பு படம்.

பவானி அருகே தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி

Published On 2021-04-25 20:31 IST   |   Update On 2021-04-25 20:31:00 IST
பவானி அருகே தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த முதியவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
பவானி:

பவானி அருகே உள்ள தளவாய்பேட்டை பகுதியை சேர்ந்த மாது என்கிற மாதையன் (வயது 71). இவர் பவானி அருகே கோணவாய்க்கால் பகுதியில் உள்ள தனியார் துணி பதனிடும் தொழிற்சாலையில் கொதிகலன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். மாதையன் நேற்று முன்தினம் இரவு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு இயந்திரத்தை தொட்டபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் மயக்கமடைந்த அவரை அங்கிருந்த சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாதையன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சித்தோடு போலீசார், தொழிற்சாலையின் மேலாளர் துளசிமணி, நிர்வாகி ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த மாதையனுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும் உள்ளனர்.

Similar News