செய்திகள்
தற்கொலை

ராஜபாளையம் அருகே ரெயில் முன் பாய்ந்து ரைஸ்மில் உரிமையாளர் தற்கொலை

Published On 2021-04-25 13:48 IST   |   Update On 2021-04-25 13:48:00 IST
ராஜபாளையம் அருகே ரெயில் முன் பாய்ந்து ரைஸ்மில் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் கீழூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுத்து (வயது36). சொந்தமாக ரைஸ்மில் வைத்துள்ளார்.

இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு இன்று காதணி விழா நடை பெறுவதாக இருந்தது

இந்த நிலையில் நேற்று இரவு செல்வமுத்து அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

இதை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் இன்று காலை சோழபுரம் நல்லமங்கலம் ரெயில்வே தண்டவாளத்தில் செல்வமுத்து உடல் துண்டான நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் மது குடித்ததை கண்டித்ததால் இரவு கொல்லம் சென்ற ரெயில் முன்பு பாய்ந்து செல்வமுத்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar News