செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்- அதிகாரிகள் தகவல்

Published On 2021-04-24 10:41 GMT   |   Update On 2021-04-24 10:41 GMT
நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடலூர்:

நீலகிரியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரியில் 399 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் கூடலூரில் 63 கடைகளும், பந்தலூரில் 46 கடைகளும் உள்ளது. இங்கு சுமார் 800 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது:-

ரேஷன் கடை ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்திய பிறகு மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும். குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிருமிநாசினி வழங்கி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News