செய்திகள்
தொழிலை மாற்றிய இளைஞர்கள்

கொரோனா பாதிப்பால் தொழிலை மாற்றிய இளைஞர்கள்

Published On 2021-04-23 04:26 GMT   |   Update On 2021-04-23 04:26 GMT
தற்போது கோடை வெயில் காலம் என்பதால் பலரும் குளுமை தரும் நுங்கு போன்றவற்றை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
புதுச்சேரி:

கொரோனா காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடங்கியுள்ளன. மக்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர். பலர் ஏற்கனவே தாங்கள் செய்து வந்த தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களிடையே பணப்புழக்கமும் குறைந்துள்ளது.

கொரோனாவினால் புதுவையில் தையல் தொழில் செய்வோர், இசைக் கலைஞர்கள் என பலரும் தங்களது வேலையை இழந்துள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த மாற்று தொழிலுக்கு மாறியுள்ளனர். இதற்கான மாற்று வழி என்ன என்பது குறித்து யோசித்த இளைஞர்கள் சிலர் புதுவை கிராமப்புறம் மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து நுங்கு வாங்கி வந்து ரெட்டியார்பாளையம் சாலையோரம் குவித்து விற்பனை செய்கின்றனர். தற்போது கோடை வெயில் காலம் என்பதால் பலரும் குளுமை தரும் நுங்கு போன்றவற்றை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

இதன் மூலம் ஓரளவு வருமானம் கிடைப்பதால் அதைக்கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News