செய்திகள்
கோப்புப்படம்

புஞ்சைபுளியம்பட்டியில் பறக்கும் படை சோதனை: கேரள வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல்

Published On 2021-04-03 09:23 GMT   |   Update On 2021-04-03 09:23 GMT
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
புஞ்சை புளியம்பட்டி:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 மணி நேரமும் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.

முக்கிய சோதனை சாவடிகளில் துணை ராணுவத்தினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி டானா புதூர் சோதனை சாவடியில் இன்று அதிகாலை 2.40 மணயளவில் பவானிசாகர் தொகுதி பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ. 2 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. காரில் வந்தவர்களிடம் கேட்ட போது தாங்கள் மாடு வியாபாரிகள் என்றும் மாடு வாங்க அந்தியூர் சென்றதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவர்கள் தரவில்லை. இதையடுத்து பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இதே போல் அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் சோதனை சாவடியில் பர்கூர் மலை பகுதிக்கு செல்லும் வாகனங்களையும், பர்கூரில் இருந்து அந்தியூர் வந்த வாகனங்களையும் நிறுத்தி விடிய,விடிய சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள்கொண்டு செல்ல வாய்ப்பு இருக்கும் என்ற தகவலால் இந்த சோதனை நடந்தது.

Tags:    

Similar News