செய்திகள்
தாயில்பட்டி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

Published On 2021-03-29 02:23 GMT   |   Update On 2021-03-29 02:23 GMT
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பறக்கும் படையினர், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் உள்பட 18 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாயில்பட்டி:

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பறக்கும் படையினர், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் உள்பட 18 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலை, சிவகாசியில் இருந்து கழுகுமலை செல்லும் மெயின் ரோடு, சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசி செல்லும் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ் உள்ளிட்ட கண்காணிப்புக்குழுவினர் வாகனங்கள் மற்றும் பட்டாசு ஆலைக்கு சொந்தமான வேன்களிலும் முழுமையாக சோதனை நடத்தினார். இந்த சோதனைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News