செய்திகள்
கோப்புப்படம்

சிவகங்கை மாவட்டத்தில் போட்டோ, வீடியோ கடைகள் அடைப்பு

Published On 2021-03-25 15:15 IST   |   Update On 2021-03-25 15:15:00 IST
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு வீடியோ எடுக்கும் பணியினை அந்தந்த மாவட்ட போட்டோ, வீடியோ தொழிலாளர்களிடம் வழங்காமல் கார்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கியுள்ளனர்.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட போட்டோ ஸ்டுடியோ, வீடியோ கடைகள் உள்ளன.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு வீடியோ எடுக்கும் பணியினை அந்தந்த மாவட்ட போட்டோ, வீடியோ தொழிலாளர்களிடம் வழங்காமல் கார்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கியுள்ளனர்.

இதனை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, மானாமதுரை, சிவகங்கை, காளையார்கோவில் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள போட்டோ ஸ்டுடியோ, வீடியோ எடிட்டிங் சென்டர், கலர் லேப் மற்றும் புகைப்பட தொழில் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து வீடியோ கடை உரிமையாளர்கள் கூறுகையில், தேர்தல் வீடியோ ஒளிப்பதிவு செய்யும் பணியை கார்பரேட் நிறுவனத்திற்கு கொடுத்து வருகிறார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கார்பரேட் கம்பெனிகள் வழங்கும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வந்தோம்.

எங்களுக்கு நேரடியாக இந்த பணியை வழங்கினால் மட்டுமே தேர்தல் ஆணையம் வழங்கும் முழுமையான சம்பளம் கிடைக்கும்.

எங்களது நிலையை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார்.

Similar News