செய்திகள்
ஊராட்சி செயலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை- ரூ.70 ஆயிரம் சிக்கியது
ஊராட்சி செயலர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையால் கல்லல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லல்:
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் பொய்யலூர் ஊராட்சி ஆளவந்தான்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45). இவர் செவரக்கோட்டை ஊராட்சியில் செயலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தவல்லி அ.தி.மு.க. பிரமுகராக உள்ளார்.
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக சிவகங்கை தேர்தல் அலவலர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி காளிமுத்து (வேளாண்மை துறை) தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் காரைக்குடி வருமான வரித்துறை ஆய்வாளர் பெருமாள், நிகில்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அவரது வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
வீட்டில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அங்கு இருந்த ஊராட்சி மன்ற செயலர் நாகராஜன், அவரது மனைவி ஆனந்தவல்லி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே அவரது வீட்டுக்கு வெளியே கத்தை கத்தையாக பணம் கிடந்தது. அந்த பணத்தை வருமான வரி துறையினர் எடுத்து எண்ணி பார்த்தனர். மொத்தம் ரூ. 70 ஆயிரத்து 600 இருந்தது. அந்த பணம் குறித்து அவர்கள் 2 பேரிடமும் விசாரித்தபோது சரிவர பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து சிவகங்கை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது? வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கப்பட்ட பணமா? அதிகாரிகள் வந்ததை அறிந்து வீட்டில் இருந்து வெளியே வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையால் கல்லல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.