நாராயணசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு- பா.ஜனதா குற்றப்பத்திரிகையில் வெளியீடு
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசு தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றாத வாக்குறுதிகள், ஊழல் குற்றச்சாட்டுகளை பா.ஜனதா கையேடாக தயாரித்துள்ளது. அதனை தேர்தல் பிரசாரத்தில் வாக்காளர்களிடம் வினியோகிக்க உள்ளனர்.
இந்த அறிக்கையில் நாராயணசாமியை கடுமையாக விமர்சித்துள்ளனர். அத்துடன் அவரை தவிர வேறு யாரையும் குறிப்பிடவில்லை.ஊழல் விவகாரங்களை பட்டியலிட்டுள்ளனர்.
நாராயணசாமி, அவரது மகன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கான நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், இலவச வேட்டி, சேலை திட்டம், முதல் அமைச்சர் நிவாரண நிதி மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு, மாகி துறைமுக பணியில் நிதி முறைகேடு, மதுக்கடைகளை குத்தகைக்கு விட்டத்தில் முறைகேடு என ஊழல் பட்டியல் நீள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.