செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேர் கைது

Published On 2021-03-21 09:13 IST   |   Update On 2021-03-21 09:13:00 IST
கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் டி.டி.டி.சி. கட்டிட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற சோமார்பேட்டை ராஜகோபால் (வயது 32), பழையபேட்டை ரகுநாத் (32), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா தொன்னகுட்டஅள்ளியை சேர்ந்த ராமராஜ் (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சோதனை செய்தனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற குமரன் என்கிற படையப்பா (57), அன்பழகன் (59), ராமன் (36) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல ஆர்.சி. சர்ச் சாலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற சுப்பிரமணி (42), சின்னராஜ் (55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஓசூர் டவுன் போலீசார் நாமல்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற சதீஷ்குமார் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News