செய்திகள்
கோப்புபடம்

வில்லியனூர் அருகே பெண் போலீஸ்காரரின் கணவர் மயங்கி விழுந்து பலி

Published On 2021-03-20 15:54 IST   |   Update On 2021-03-20 15:54:00 IST
வில்லியனூர் அருகே பெண் போலீஸ்காரரின் கணவர் மயங்கி விழுந்து இறந்து போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 43). இவர், பொதுப் பணித்துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மாலா. இவர், புதுவை காவல்துறை தலைமை அலுவலகத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை தேவநாதன் வீட்டில் டீ குடித்து விட்டு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரது மனைவி மாலா மற்றும் உறவினர்கள் தேவநாதனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக் டர்கள் வரும் வழியிலேயே தேவநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி மாலா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News