செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே வாகன சோதனையில் புடவைகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சோக்காடி கூட்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சோக்காடி கூட்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் ரூ.47 ஆயிரத்து 535 மதிப்புள்ள புடவைகள், சட்டைகள் உள்ளிட்ட துணிகள் இருந்தது. இதுதொடர்பாக காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் ராயக்கோட்டை-கெலமங்கலம் சாலையில் உள்ள கொட்டூர் கிராமத்தை சேர்ந்த சங்கரமூர்த்தி (55) என்பதும் உரிய ஆவணங்கள் இன்றி புடவைகள், சட்டைகள் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் புடவை உள்ளிட்டவை பறிமுதல் செய்து, கிருஷ்ணகிரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.