செய்திகள்
வெம்பக்கோட்டை பகுதியில் வாகன சோதனை நடைபெற்றது.

வெம்பக்கோட்டை பகுதியில் தீவிர வாகன சோதனை

Published On 2021-03-19 22:56 IST   |   Update On 2021-03-19 22:56:00 IST
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெம்பக்கோட்டை பகுதியில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
தாயில்பட்டி:

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் முன் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம், பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் மண்குண்டாம்பட்டி, துலுக்கன்குறிச்சி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட முக்கிய சந்திப்பு இடத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது அந்த வழியாக வாகனங்கள் அனைத்தும் நகை மற்றும் பணங்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படுகிறதா என பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ், வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ், ஆகியோர் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

Similar News