செய்திகள்
கடன் பிரச்சினை: பெட்ரோல் பங்க் நடத்தியவர் தற்கொலை
கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பெட்ரோல் பங்க் நடத்தியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்புவனம்:
பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது படமாத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கை சிவகங்கை அருகே உள்ள இலந்தங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம்(வயது 52) என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.
இதில் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் முருகானந்தம் பெட்ரோல் பங்குக்கு பின்புறமுள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.