செய்திகள்
ஓசூர் சிப்காட் அருகே லாரி மீது கார் மோதியதில் சாப்ட்வேர் நிறுவன ஊழியர் பலி
ஓசூர் சிப்காட் அருகே லாரி மீது கார் மோதியதில் சாப்ட்வேர் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
ஓசூர் சிப்காட் அருகே பேடரப்பள்ளியை சேர்ந்தவர் தீபக்சிங் (வயது 38). சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் காரில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சின்னாறு அருகில் சென்று கொண்டு இருந்தார். காரை ஓசூர் நேதாஜி நகரை சேர்ந்த வெங்கடேஷ் (31) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தீபக்சிங் சம்பவ இடத்திலேயே இறந்தார். டிரைவர் வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.