செய்திகள்
பாஜக பிரமுகர் வீட்டில் பதுக்கி இருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவைகள் பறிமுதல்
புதுவையில் பாஜக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான பட்டுப் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
சட்டமன்ற தேர்தலையொட்டி புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றன. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மாலை ரெட்டியார்பாளையம் ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பட்டுப் புடவைகளை பதுக்கி வைத்து இருப்பதாக 1950 என்ற தேர்தல் தொடர்பான புகார் எண்ணுக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில், தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஜீவானந்தம் தலைமையிலான துணை ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சுரேஷ் வீட்டிற்கு விரைந்து சென்று அங்கு சோதனையிட்டனர்.
அப்போது ஒரு அறையில் சுமார் 50 புடவைகள் கொண்ட 30 அட்டைப் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்தியபோது சுரேஷ் பா.ஜ.க.வில் இருப்பதும், அவரது நண்பருக்காக தனது வீட்டில் பட்டுப் புடவைகளை பதுக்கி வைத்து இருந்ததாகவும் கூறி இருப்பதாக தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பட்டுப் புடவைகளின் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அவை ரெட்டியார்பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டன. பட்டுப்புடவைகள் வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.