செய்திகள்
லாஸ்பேட்டையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
லாஸ்பேட்டையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி சின்னதச்சூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 41) எலக்ட்ரீசியன். புதுவை லாஸ்பேட்டை நந்தா நகரில் புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டில் நேற்று முன்தினம் வேலை செய்தார்.
அப்போது 3-வது மாடியில் கட்டிங் மிஷினில் மின் இணைப்புக்காக ஒயரை இணைத்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சிவக்குமார் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.