செய்திகள்
தற்கொலை

விருதுநகர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-03-11 17:50 IST   |   Update On 2021-03-11 17:50:00 IST
விருதுநகர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள இ.முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் மணிராஜ் (வயது 35). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தினசரி குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். நேற்றும் குடிபோதையில் வீட்டிற்கு வந்த மணிராஜ் மனைவி சரஸ்வதியுடன் தகராறு செய்தார். இதைத்தொடர்ந்து சரஸ்வதி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்.

சிறிது நேரத்தில் மணிராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News