செய்திகள்
பலி

பழவேற்காட்டில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு

Published On 2021-02-18 08:05 IST   |   Update On 2021-02-18 08:05:00 IST
பழவேற்காட்டில் ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் மீனவர் பலியானார்.
பொன்னேரி:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்த அரங்கன்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 32). இவருடன் 5 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் மீன் பிடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு படகில் கரை திரும்பினர்.

பழவேற்காடு முகத்துவாரம் வழியாக வந்து கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சிவகுமார் கடலில் விழுந்து மூழ்கி பலியானார். மற்றவர்கள் கரை திரும்பிய நிலையில் நேற்று மாலை சிவகுமாரின் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீனவர் சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News