செய்திகள்
கக்குண்டி அரசு பள்ளி சுற்றுச்சுவரில் ஓவிய போட்டி நடைபெற்றபோது எடுத்த படம்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி

Published On 2021-02-15 18:20 GMT   |   Update On 2021-02-15 18:20 GMT
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.
கூடலூர்:

நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது. தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே வெள்ளைத்தாளில் ஓவியங்கள் வரைந்து வாட்ஸ்அப் அல்லது நேரில் மூலமாக தங்களது ஓவியங்களை அந்தந்த பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர்.

இதில் வெற்றி பெற்றவர்கள் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டிக்கு தேர்வாகினர். பந்தலூர் தாலுகா கக்குண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓவியப் போட்டி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் பால் விக்டர் தலைமை தாங்கினார். ஆசிரியர் கள் அரிமா பேகம், எலியாஸ், ஸ்ரீகலா ஆகியோர் முன்னிலையில் மாணவிகள் ஆதித்யா, அகிலா, த்ருசியா, கோபிகா, ஆன்மரியா தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பள்ளி சுற்றுச் சுவரில் ஓவியங் களை வரைந்தனர்.

இதில் ஆதித்யா முதல் பரிசையும், 2-வது இடத்தை அகிலாவும், த்ருசியா 3- வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். இவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-

பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டிலிருந்தபடியே மாணவர்கள் ஓவியம் வரைந்து அனுப்பினர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.

அவர்கள் பள்ளி சுற்றுச் சுவரில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் தேர்வானவர்கள் மாவட்ட அளவில் விரைவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News