செய்திகள்
அஜின்

சுங்கான்கடை அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயர் பலி

Published On 2021-02-11 17:20 GMT   |   Update On 2021-02-11 17:20 GMT
சுங்கான்கடை அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
திங்கள்சந்தை:

மார்த்தாண்டம் அருகே பம்மம் கல்லு தொட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் அப்பகுதியில் கார் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மகன் அஜின் (வயது 26). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், தந்தையுடன் ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். அஜினுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று காலை அஜின் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சுங்கான்கடை அருகே களியங்காடு பகுதியில் சென்ற போது எதிரே நாகர்கோவில் நோக்கி வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் அஜின் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இ்டத்துக்கு விரைந்து வந்தனர். அஜினிடம் இருந்த செல்போன் மூலம் அவருடைய தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த விஜயன் மற்றும் உறவினர்கள் அஜினின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் அஜினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விபத்தில் சிக்கிய லாரி, மதுரையில் இருந்து பழங்களை ஏற்றி வந்து சுங்கான்கடை பகுதியில் இறக்கி விட்டு மீண்டும் மதுரைக்கு செல்வதற்காக நாகர்கோவில் நோக்கி வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இதுதொடர்பாக லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News