செய்திகள்
தற்கொலை

சிங்காரப்பேட்டை அருகே எல்ஐசி முகவர் தற்கொலை

Published On 2021-01-31 10:36 IST   |   Update On 2021-01-31 10:36:00 IST
சிங்காரப்பேட்டை அருகே எல்ஐசி முகவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை அருகே உள்ள பெரியதள்ளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). எல்.ஐ.சி. முகவர். இவர் தனது குடும்ப செலவிற்காக பலரிடம் கடன் பெற்றார். போதிய வருமானம் இன்றி பணத்தை அவர்களுக்கு சுப்பிரமணி திரும்ப கொடுக்க முடியவில்லை. இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திரும்ப கேட்டு வந்தனர். இதனால் மனமுடைந்த சுப்பிரமணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News