செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் போலீசார் முதுகானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த தளி வேலு (வயது 29), டி.கொத்தூர் குபேந்திரன் (33), அலேநத்தம் ரங்கப்பா (33), அரசகுப்பம் சுதாகர்ரெட்டி (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.