செய்திகள்
கெலமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை
கெலமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த குந்துமாரனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகள் திருவேணி (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மரத்தில் இருந்து கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு உடைந்து படுத்த படுக்கையாக இருந்தார்.
இதனால் மனவேதனையுடன் இருந்த திருவேணி, கடந்த 26-ந் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை உடனடியாக மீட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.