செய்திகள்
சுகாதார வளாகத்தை சுற்றி புதர்மண்டிக்கிடக்கும் காட்சி

சாத்தூர் அருகே சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2021-01-28 13:31 GMT   |   Update On 2021-01-28 13:31 GMT
சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டி கிராமத்தில் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்:

போத்திரெட்டிபட்டி கிராமத்தில் 1,200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

2 ஆண்டுகள் தான் இந்த சுகாதார வளாகம் பயன்பாட்டில் இருந்தது. அதன்பின்னர் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. எனவே தற்போது இந்த சுகாதார வளாகம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலாளிகளாக உள்ளனர். பெரும்பாலோனோர் வீடுகளில் கழிவறை வசதி இல்லை.

இந்தநிலையில் இங்குள்ள பெண்கள் சுகாதார வளாகமும் பயன்பாடற்று போனதால் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். ஆதலால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியதாவது:-

சுகாதார வளாகம் கட்டிய சிலர் ஆண்டுகள் பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். பின்னர் சரியான முறையில் சுகாதார வளாகத்தை பராமரிக்கவில்லை.

ஆதலால் தற்போது சுகாதார வளாகம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பயன்பாடு இல்லாததால் சுகாதார வளாகத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக்காணப்படுகிறது.

எனவே தேவையற்ற செடிகளை அகற்றி, சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News