செய்திகள்
வைகோ

டெல்லி காவல்துறைக்கு வைகோ கண்டனம்

Published On 2021-01-26 09:37 GMT   |   Update On 2021-01-26 09:37 GMT
டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். 

11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர்.

தற்போது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தற்போது தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி போர்க்களமாக காட்சியளிக்கிறது

இந்நிலையில் வைகோ வெளியிட்டுள்ள செய்தியில் , 

டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது. மக்கள் கிளர்ச்சி எரிமலையாக வெடிக்கும் என்பதை உணர்ந்து 3 சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பிடிவாதம் பிடித்து விவசாயிகளை ஒடுக்கிவிடலாம் எனக் கருதினால் விபரீத முடிவே ஏற்படும் என தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News