செய்திகள்
பஸ் மோதி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் ஜெமின் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லப்பன் (வயது 56). இவர் மின்வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கீழப்பழுவூர் புதிய பஸ்நிலையம் அருகே அவரது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பஸ் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த நல்லப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.