செய்திகள்
அரியலூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு: கலெக்டரிடம் விவசாயிகள் மனு
அரியலூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட மக்கள் சேவை இயக்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் மழையால் பாதிக்கப்பட்ட நெல், சோளம், மிளகாய் பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.