செய்திகள்
விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்த படம்.

கடலூரில், ஹெல்மெட் பேரணி : இருசக்கர வாகனத்தை ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் சூப்பிரண்டு

Published On 2021-01-19 18:04 GMT   |   Update On 2021-01-19 18:04 GMT
கடலூரில் நடந்த ஹெல்மெட் பேரணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், இருசக்கர வாகனத்தை ஓட்டி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர்:

கடலூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் சார்பில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று கடலூரில் நடந்தது. டவுன்ஹாலில் இருந்து புறப்பட்ட பேரணியை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலந்து கொண்டு, இரு சக்கர வாகனத்தை ஓட்டி சக போலீசாருடன் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த பேரணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர், தன்னார்வ அமைப்பினர் ஹெல்மெட் அணிந்தபடி இரு சக்கர வாகனங்களில் நகர முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தனர்.

முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டுபிரசுரம் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் ஏற்படுத்தினர்.

இதில் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் எழில்தாசன், மணிகண்டன், மகாலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News