செய்திகள்
உடையார்பாளையத்தில் தீ விபத்து ஏற்பட்ட கடையையும், எரிந்து நாசமான காரையும் படத்தில் காணலாம்.

பழக்கடை தீப்பற்றி எரிந்ததில் ரூ.60 ஆயிரம்- பொருட்கள் நாசம் - மற்றொரு சம்பவத்தில் கார் தீக்கிரையானது

Published On 2021-01-18 09:58 GMT   |   Update On 2021-01-18 09:58 GMT
உடையார்பாளையத்தில் பழக்கடை தீப்பற்றி எரிந்ததில் ரூ.60 ஆயிரம் மற்றும் பொருட்கள் நாசமாயின. மற்றொரு சம்பவத்தில் கார் தீக்கிரையானது.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பழைய போலீஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் தங்கராசு(வயது 70). இவர் உடையார்பாளையம் கடைவீதியில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த கடை தீப்பற்றி எரிவதாக அருகில் இருந்தவர்கள், தங்கராசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்து பார்த்த தங்கராசு, இது பற்றி ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து கடையில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பழங்கள், ஏ.சி. எந்திரம், டி.வி. என சுமார் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் கடையில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

உடையார்பாளையம் லயன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(45). மரங்கள் அறுக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் தனது காரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு நேற்று முன்தினம் விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பத்துடன் பஸ்சில் காரைக்கால் சென்றுவிட்டார். நேற்று அதிகாலை அந்த கார் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவங்களில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Tags:    

Similar News