செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்

ஜெயங்கொண்டத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

Published On 2021-01-17 15:29 IST   |   Update On 2021-01-17 16:34:00 IST
ஜெயங்கொண்டத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருச்சி - சிதம்பரம் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு வேகத்தடைக்கு அருகே ஒரு சிறிய பள்ளம் இருந்தது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், அதிக வாகனங்கள் சென்று வருவதாலும் அந்த பள்ளம் அகலமாகி குழி போன்று மாறியுள்ளது. 

அந்த வழியாக குழி இருப்பது தெரியாமல் நடந்து சென்றவர்களும், வாகனத்தில் ெசன்றவர்களும் கீழே விழுந்து அடிபட்டு மருத்துவமனை சென்று திரும்பிய சம்பவம் நடந்துள்ளது. மேலும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன்பு அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News