செய்திகள்
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரம் வரை கனமழை பெய்யும்- வானிலை மையம்

Published On 2021-01-13 17:28 IST   |   Update On 2021-01-13 17:28:00 IST
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி முதல் 6 மணி வரை கனமழை பெய்யும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நெல்லையில் பெய்த கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் உபரிநீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கனமழையுடன் காற்றும் வீசியது. இந்த நிலையில் குமரிக்கடலில் புதிய காற்றுத்தழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 3 மணி நேரம் அல்லது 6 மணி நேரம் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Similar News