செய்திகள்
கோப்புபடம்

தளவாய்புரம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி போராட்டம்

Published On 2021-01-08 18:38 IST   |   Update On 2021-01-08 18:38:00 IST
தளவாய்புரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் மண்டகப்படி அருகில் அரசு புறம்போக்கு நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி போராட்டம் நடைபெற்றது.
தளவாய்புரம்:

தளவாய்புரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் மண்டகப்படி அருகில் அரசு புறம்போக்கு நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி நேற்று காலை தளவாய்புரத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து தளவாய்புரம் மாரிமுத்து நாடார் திருமண மண்டபம் முன்பு நிர்வாக கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ராஜ்பாபு தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

இதில் கோவில் மண்டகப்படி அருகில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற வாசகம் எழுதிய அட்டையை கையில் ஏந்தி இருந்தனர். ராஜபாளையம் தாசில்தார் ஸ்ரீதர், தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகியோர் நிர்வாக கமிட்டியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ஒரு வார காலத்திற்குள் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. கடைகள் திறக்கப்பட்டது.

Similar News