செய்திகள்
கோப்புபடம்

பெண் மரணம்: மகள் புகாரின் பேரில் போலீசார் விசாரணை

Published On 2021-01-08 18:37 IST   |   Update On 2021-01-08 18:37:00 IST
விருதுநகர் அருகே பெண் மரணமடைந்த சம்பவம் குறித்து மகளின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியைச் சேர்ந்தவர் ராமுத்தாய் (வயது 60). இவர் கடந்த 2-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

பின்னர் அவர் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இது தொடர்பாக சென்னையில் வசிக்கும் அவரது மகள் பாண்டீஸ்வரி (30) வச்சக்காரபட்டி போலீசில் புகார் அளித்தார். 

அந்த புகாரில், தனது தாய் இறந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News