செய்திகள்
விபத்து பலி

புதுச்சேரி அருகே கார் மோதி பெயிண்டர் பலி

Published On 2021-01-05 21:28 IST   |   Update On 2021-01-05 21:28:00 IST
புதுச்சேரி அருகே கார் மோதி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 45) பெயிண்டர். இவரது மனைவி கவுசல்யா (33). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று சின்ன காலாப்பட்டு பகுதியில் நின்றுகொண்டிருந்த ஆனந்த் மீது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போக்குவரத்து வடக்கு பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News