செய்திகள்
மஞ்சூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
மஞ்சூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஞ்சூர்:
மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குந்தா, எடக்காடு, பெங்கால் மட்டம், பிக்கட்டி, எமரால்டு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது எடக்காடு பஜாரில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர், பெங்கால் மட்டம் பஜார் பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மகன் நவீன் என்கிற முருகேசன் (வயது 22) என்பதும், கஞ்சா விற்று வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.