செய்திகள்
பந்தலூர் அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை
பந்தலூர்அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்:
பந்தலூர்அருகே கரியசோலை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 21) ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 26-ந் தேதி வீட்டில் வாயில் நுரைதள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சுல்தான்பத்தேரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெலாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் விஷம் குடித்தது தெரியவந்தது.அதற்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.