செய்திகள்
கோப்புப்படம்

நீலகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

Published On 2020-12-31 07:32 IST   |   Update On 2020-12-31 07:32:00 IST
நீலகிரி மாவட்டத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 917 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. 15 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்தார். நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7, 930 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 7, 771 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 46 பேர் இறந்தனர். மீதம் உள்ள 113 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News