செய்திகள்
கேபி முனுசாமி

முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான், இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கிவிடுவோம்- கேபி முனுசாமி

Published On 2020-12-30 18:56 IST   |   Update On 2020-12-30 19:10:00 IST
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான், இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கிவிடுவோம் என்று கேபி முனுசாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆதாலியூரில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான், இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கிவிடுவோம். 


புதிய கட்சி தொடங்கும் அனைவரும் எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். கருணாநிதி ஆட்சியை அமைப்போம் என்று ஏன் கூறுவதில்லை என கேள்வி எழுப்பினார்.

Similar News