செய்திகள்
கோப்புபடம்

பர்கூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2020-12-26 14:14 IST   |   Update On 2020-12-26 14:14:00 IST
பர்கூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பர்கூர்:

கந்திகுப்பத்தை அடுத்த மேல்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரராவ் (வயது 57). விவசாயி. சம்பவத்தன்று இவருக்கும், இவரது மனைவி லட்சுமிபாய்க்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கஜேந்திரராவ் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து கஜேந்திரராவ் தற்ெகாலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News