செய்திகள்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம்- ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை

Published On 2020-12-26 11:56 IST   |   Update On 2020-12-26 11:56:00 IST
ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்த மாறுபாட்டை தவிர ரஜினிக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பிரபலங்கள் ரஜினியை தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்த நிலையில் இன்று ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஜினியின் ரத்த அழுத்த மாறுபாடு, நேற்று இருந்ததை விட இன்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ரஜினிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எந்த ஆபத்தான முடிவும் வரவில்லை. ரஜினியை சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. அவரது டிஸ்சார்ஜ் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News